May 6, 2017
வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த பள்ளி சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி: மயிலாப்பூரில் பரபரப்பு சம்பவம்
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுமியை பட்டப்பகலில் மர்ம நபர் ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலை, முத்துபாண்டியன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (44). இவருக்கு அமுதா என்ற மனைவியும், அஸ்மிதா (9) என்ற மகளும் உள்ளனர். அஸ்மிதா அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே அஸ்மிதா சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், அஸ்மிதாவிடம் பேச்சு கொடுத்து ஆட்டோவில் வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, அஸ்மிதாவும் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது இதை கவனித்த அருகில் வசிக்கும் பெண் ஒருவர், அஸ்மிதாவை மீட்டு பெற்றோரிடம் விட்டுள்ளார்.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஸ்மிதாவின் பெற்றோர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற நபர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அஸ்மிதாவிடம் வீடு எங்க உள்ளது. வீட்டில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று மர்ம நபர் சிகப்பு நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் அணிந்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அஸ்மிதா வீட்டின் அருகே பிரபல ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் அஸ்மிதாவை கடத்த முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் பட்டப்பகலில் பள்ளி சிறுமி ஒருவரை ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த பள்ளி சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி: மயிலாப்பூரில் பரபரப்பு சம்பவம்
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.