Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு


தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் அவரது ஆதரவாளர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவரது கைது நடவடிக்கையை கண்டித்து மதுரையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தின் அருகில் தினகரனின் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நாஞ்சில் சம்பத், கர்நாடகா அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாடிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டனர்


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.