Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ரஜினிக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலில் எடுபடமாட்டார்.. அன்புமணி குற்றச்சாட்டு!


நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் தினமும் கடிதம் மற்றும் போன் மூலமாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கனவை நிறைவேற்ற விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைமுகமாக தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் பாமக நிர்வாகியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று  கேட்டனர்.
அது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 40 ஆண்டுகளாக திரைத்துறையினர் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அதேபோன்று நடிகர்களுக்கு டூப் போடத்தான் தெரியும் அரசியலில் எடுபட மாட்டார்கள். இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூற வேண்டும்.
.

அவர் சொல்வது புலி வருது புலி வருதுனு சொல்வது போன்று உள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.