Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2017

ஆர்.டி.ஐ மூலம் அம்பலமானது ரயில்வேத் துறையின் மெகா ஊழல்!


மத்திய ரயில்வே துறையில் சமையல் பொருள்கள் அதன் சாதாரண விலையை விட பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டு ஊழல் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரயில்வே துறையில் என்ன விலைக்கு சமையல் பொருள்கள் வாங்கப்படுகின்றன என கேட்டிருந்தார். இதையடுத்து ரயில்வே துறை சார்பில் இவருக்கு அளிக்கப்பட்ட பதில் அறிக்கையில், மத்திய ரயில்வேயின் ஊழல் அம்பலமாகியுள்ளது. அதில் 1 லிட்டர் சமையல் எண்ணெய் 1241 ரூபாய்க்கும், 100 கிராம் தயிர் 972 ரூபாய்க்கும், 15 ரூபாய் மதிப்புள்ள உப்பு பாக்கெட்டுகள் 49 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது மத்திய ரயில்வே நிர்வாகம். மேலும் சிக்கன், பருப்பு வகைகள், கை துடைக்கும் டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பல பொருள்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அஜய் போஸ் கூறுகையில்,' ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையின் மூலம் ரயில்வே துறையின் ஊழலும் நஷ்டத்துக்கான காரணமும் தெரியவந்துள்ளது' என்று கூறியுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல் தரப்பில்,' இது தட்டச்சுப் பிழையாகத்தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ரயில்வே துறையின் ட்விட்டர் பக்கத்தில், 108 தயிர் டப்பாக்கள் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டியின் விலையே 970 எனவும், அதன் படி 100 கிராம் தயிர் 9 ரூபாய்க்கு தான் வாங்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.