Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2017

திருமுருகன் காந்தி கைது: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்.. கொதிக்கும் பிரபலங்கள்!


மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் திருமுருகன் காந்தியின் கைது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என டிவிட்டரில் கருத்து தெரிவத்துள்ளனர்.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை நேற்று தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இதற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


டிவிட்டரில் ஆதரவு குரல்
அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. டிவிட்டரிலும் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.

பிரபலங்கள் எதிர்ப்பு
இந்நிலையில் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது
இதுதொடர்பாக இயக்குநர் ராஜு முருகன் பதிவிட்டுள்ள டிவிட்டில் தோழர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கருத்து சுதந்திரத்துக்கும் அரசியல் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயல். கண்டனங்கள்! என தெரிவித்துள்ளார்.


ஜிவி பிரகாஷ் கண்டனம்
இதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள டிவீட்டில் மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி, டைசன் ,அருண்குமார் உள்ளிட்டவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.