May 11, 2017
அண்ணாமலைப் பல்கலை.யில் இன்று நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் கடந்த 25 ஆண்டுகளாக படித்து சான்றிதழ் பெறாத, நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் கடந்த 1991 முதல் 2015 டிசம்பர் வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழை பெற்றுக் கொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளன.
இந்த நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்புத் திட்ட முகாம் தேர்வுத் துறை அலுவலக வளாகத்தில் மே 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் படித்து சான்றிதழ் பெறாதவர்கள் இந்தச் சிறப்புத் திட்ட முகாமில் பங்கேற்று பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழ் பெற வருபவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையுடன் வந்து, பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி, அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தகவலை துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலை.யில் இன்று நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.