Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2017

ஜெர்மனியில் பிரதமர் மோடி- பிரியங்கா சோப்ரா சந்திப்பு: நேரம் கிடைக்காததால் ஜெர்மனியில் சந்தித்ததாக பிரதமர் விளக்கம்


 பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நடிகை பிரியங்கா சோப்ரா ஜெர்மனியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி ஆறு நாள்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல் நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி நேற்று ஜெர்மன் சென்றார். அப்போது இருநாட்டு உறவு அந்நாட்டு அதிகாரிகளுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள 'பேவாட்ச்' ஹாலிவுட் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படத்தின் புரொமோஷனுக்காக தற்போது அவரும் ஜெர்மனியில் தான் இருக்கிறார். இதனையடுத்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் பிரதமர் மோடியை  நடிகை  பிரியங்கா சோப்ரா சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடியுடன் பிரியங்கா சோப்ரா புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.