Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

கியா மோட்டார்ஸை தொடர்ந்து தமிழகத்தை விட்டு சின்டெல் வெளியேறுகிறது: லஞ்சம் கொடுக்காததால் ஒப்புதல் கிடைக்கவில்லை


தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று லஞ்சம் காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மெகா தொழில் திட்டம் கைவிடப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சின்டெல் நிறுவனமே பெரும் திட்டத்தை கைவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட தொழில் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் சின்டெல் இறங்கியது. 2013-ம் ஆண்டு வரியில்லா சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் 100 ஏக்கரில் திட்டத்தை தொடங்கும் நடவடிக்கையை அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டது.

முதற்கட்டமாக இரண்டரை லட்சம் சதுர அடியில் திட்டத்தை செயல்படுத்த சின்டெல் முடிவு செய்தது. அதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்தும் தமிழக அரசின் ஒப்புதலுக்காக சின்டெல் அதிகாரிகள் 2 ஆண்டுகள் தவம் கிடைக்க வேண்டியதாயிற்று. ஒற்றை சாளர முறையிலான இத்திட்டத்தை லஞ்சம் தராமல் தொடங்குவதில் அமெரிக்க நிறுவனம் உறுதியாக இருந்துள்ளது. ஆனால் அமைச்சரை சந்தித்து கவனிக்க வேண்டிய நடைமுறைகளை முடித்தால் மட்டுமே திட்டத்திற்கு பச்சைக் கொடி கிடைக்கும் என கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே கங்கைகொண்டான் திட்டத்துக்கான கெடு கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்ததால் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாதது துயரத்திற்கு அமெரிக்க நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதனால் 2,500 தொழிலாளர்கள் வேலை  பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஏற்கனவே தென்கொரியாவின் கியா மோட்டார்சின் கார் தொழிற்சாலை லஞ்சம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு மெகா திட்டம் லஞ்சம் காரணமாக கைக்கூடாமல் போனது தொழில்துறை மத்தியில் கடும் கண்டனத்தை உருவாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.