Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2017

ஆளும் வர்க்கத்திற்கு இரக்கமே இல்லையா? நெடுவாசலில் மக்கள் குளத்தில் இறங்கி நூதனப் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் இன்று 21வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பெண்கள் மற்றும் இளைஞர்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கினார்கள்.
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடர் போராட்டம் நாடி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

நூதனப் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இந்தப் போராட்டத்தில் தூக்குப்போடுதல், முட்டிப்போட்டுப் பிரார்த்தனை, அங்கப் பிரதட்சணம் செய்தல் என பலவிதமான போராட்டங்களை நெடுவாசல் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

மரத்தில் ஏறி..
போராட்டத்தின் 20வது நாளான நேற்று பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் மரத்தில் ஏறி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளத்தில் இறங்கி..
அந்த வகையில் 21ம் நாளான இன்று குளத்தில் இறங்கி நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டக்காரர்கள் குளத்தில் இறங்கிய போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினார்கள்.

 ஆதரவு
நெடுவாசலில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.