Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ஆறு ஆந்திர ஏழை இளைஞர்கள் எவரெஸ்ட் சிகரம் அடைந்து சாதனை


இந்தப் பருவத்தில் முதன் முறையாக ஆந்திரத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள் ஆறு பேர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

சனிக்கிழமைக் காலை 8.20 மணி முதல் 9.20 மணிக்குள் ஒருவர் பின் ஒருவராக 10 மலையேற்று பணியாளர்கள் (ஷெர்பாக்கள்) உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். சுந்தரண்ணா எனும் விசாகபட்டினத்து இளைஞர் முதன் முதலாக சிகரத்தை அடைந்தார். அவரது பெற்றோர் தினக் கூலிகள் என்று கூறப்படுகிறது.

அடுத்தாக சிகரத்தை அடைந்த சத்யா ராவ் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கின்றனர். இத்தகவல்களை டிரான்ஸண்ட் அட்வெஞ்சர்ஸ் அமைப்பின் ஃபேஸ்புக் பக்கம் தெரிவிக்கிறது. இதன் நடுவில் வியாழக்கிழமை 9 ஷெர்பாக்கள் அடங்கிய குழு ஒன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.