Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2017

நீட் தேர்வு சோதனைகள், கெடுபிடிகள் சரிதான்...தப்பில்லை - இல.கணேசன்


நீட் தேர்வின் போது நடத்தப்பட்ட சோதனைகளும் கெடுபிடிகளும் சரிதான். அப்போதுதான் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூரியுள்ளார்.

நீட் தேர்வில் சோதனைகள் நடத்தப்பட்டது சரிதான். அப்போதுதான் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
இந்தாண்டு நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தபோது மாணவர்களை மெட்டல் டெடெக்டர் மூலம் சோதஹ்னை செய்தனர். முழுக் கை சட்டையின் கைகளை அறுத்து அரை சட்டையாக்கினார்கள். மாணவிகளின் தலைமுடியைகூட விட்டு வைக்கவில்லை.

இதன் உச்சகட்டமாக கேரளாவில் ஒரு மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்னார்கள். இப்படி பலவித அருவெறுப்பூட்டும் செயல்களைச் செய்து மாணவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கினார்கள்.

இதுகுறித்து மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,'' நீட் தேர்வின் போது சோதனை நடத்தப்பட்டதும் அங்கு நடந்த அத்தனை கெடுபிடிகளும் சரிதான். அதில் எந்த தவறுமில்லை.

அந்த சோதனைகள் மூலம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறையும். அதன் மூலம் திறமையில்லாத ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. திறமையும் தகுதியும் உடைய ஒருவர் மருத்துவர் ஆவார். தமிழ்நாட்டில் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டதை வரவேற்கிறேன்'' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.