May 17, 2017
பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய புதிய மாற்றங்கள்.. யோகா கட்டாயம்… - செங்கோட்டையன்
பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யவிருப்பதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதில் யோகா சேர்க்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகா மற்றும் உடற்கல்வியை கட்டாய பாடமாக சேர்க்க உள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன என்றும் அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய செங்கோட்டையன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவித்த அமைச்சர், மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய புதிய மாற்றங்கள்.. யோகா கட்டாயம்… - செங்கோட்டையன்
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.