Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

உயிர் வாழ ஆசையா.. அப்ப பூமியை காலி பண்ணிட்டு வேற கிரகத்துக்கு ஓடிருங்க.. எச்சரிக்கும் ஹாக்கிங்


பருவ நிலை மாற்றத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டுமானால் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்தார்.

லண்டன்: பருவ நிலை மாற்றத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டுமானால் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்தார்.

வளி மண்டலத்தில் மாசு ஏற்பட்டு வருவதாலும், பருவ நிலை மாற்றத்தினாலும் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பருவ நிலை மாற்றத்தை தடுக்க வழிமுறைகள் குறித்தும் உலக அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஆவணப்படம் ஒன்றின் மூலம் ஹாக்கிங் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அதாவது அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை, தொற்றுநோய்கள் உள்ளிட்டவைகளில் இருந்து நாம் தப்பி உயிர் வாழ வேண்டும் என்றால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் காலி செய்ய வேண்டும்.

மேலும் மனிதன் வாழ தகுதியான வேற்று கிரகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் அங்கு குடியேற மனிதர்கள் முற்பட வேண்டும் என்று அவர் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்
.
வேற்று கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஹாக்கிங்கும், அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.