Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

பேருந்து ஸ்டிரைக்கால் மக்கள் அவதி..! மறுபுறம் ரஜினி ரசிகர்களுடன் உற்சாகம்! இரண்டுமே சென்னையில்தான்.!


தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பல இடங்களில் பேருந்து சேவைகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. சென்னையில் வேலைக்கு செல்வோர்கள் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளை நாடி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி சில இடங்களில் கால் டாக்சி, மற்றும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதனால் தினக்கூலிக்கு செல்வோர்கள் கையில் பணம் இல்லாததால் நடந்தே வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினி திட்டமிட்டப்படி இன்று தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
ஒரு புறம் பேருந்து இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற நிலையில், ரசிகர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடிகர் ரஜினியை பார்த்து பொதுமக்கள் பல விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.