May 9, 2017
ஜம்மு-காஷ்மீர் இல்லாத இந்திய வரைப்படத்தை விற்று காசுபார்த்த அமேசான்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இடம்பெறாத இந்திய வரைப்படத்தை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பாகா, அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகப் பக்கத்தில், இந்த சர்ச்சைக்குரிய விற்பனை அறிவிப்பை பார்த்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே, இந்திய கொடி அச்சிடிப்பட்ட கால் மிதிகளை விற்பனை செய்து கண்டனத்திற்கு உள்ளான நிலையில், கனடாவில் இயங்கும் அமேசான், தவறான இந்திய வரைப்படத்தை இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டு, இந்தியாவை அவமதிக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படுவதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன. ஜம்மு காஷ்மீர் பகுதிகளை உரிமை கொண்டாடும் விவகாரத்தில், பாகிஸ்தானுடன் பிரச்சனை இருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் இல்லாத இந்திய வரைப்படத்தை விற்று காசுபார்த்த அமேசான்
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.