Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2017

கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை


தான் செய்துவரும் வேலையை மறைத்து, வேறு பணி செய்வதாகக் கூறி அவரது மகள்களைப் படிக்க வைத்துள்ளார் அன்பான தந்தை ஒருவர்.

முகநூலில் இந்த உண்மையை செய்தியாளர் ஒருவர் கடந்த 6-ம் தேதி பதிவிட்ட வேகத்தில், உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்து, தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த உருக்கமான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தத் தந்தை, கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆனால், தனது மகள்களிடம் தொழிலாளியாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, பொதுக் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, மகள்களைப் படிக்க வைத்து வருகிறார்.

இதற்கு அவர் கூறும் காரணம் தான் நம்மை நெகிழ வைக்கிறது. “இந்தச் சமூகத்தில் அவர்கள் (தன்னுடைய குழந்தைகள்) சக மனிதர்கள் மத்தியில் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை என்னைப் போல் கீழ்த்தரமாக ஒருபோதும் யாரும் நினைத்துவிடக் கூடாது. பொதுமக்கள் எப்போதும் என்னை அவமானப்படுத்துவார்கள்” என்று அந்தத் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார்.

ஒருநாள் அவரது வேலையின் ரகசியம் வெளியே தெரியவந்தது. அன்னைறய தினம் அவரது மகள்களுக்கு கல்லூரிக் கல்வி கட்டணம் செலுத்த கடைசிநாள். ஆனால், அந்தத் தந்தையிடம் போதிய பணம் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்தார். என்ன செய்வதென்று தெரியா சூழலில், அன்று அவருக்கு சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்காதது பேரிடியாக இருந்தது.

ஆனால், அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள், இதையறிந்து அன்று அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வந்து அந்தத் தந்தையிடம் கொடுத்தனர். அவர் முதலில் வேண்டாம் என மறுத்துள்ளார். அப்போது அந்தத் தொழிலாளர்கள், “தேவைப்பட்டால் நாம் பட்டினியாக இருக்கலாம். ஆனால், நம்முடைய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்” என கூறியதை தந்தை நினைவு கூர்ந்தார்.

கல்லூரியில் படித்துவரும் அவர்கள் தந்தையின் உண்மை நிலையை அறிந்து, மாலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றனர். தங்களுக்காக உழைத்தது போதும் என அந்தத் தந்தையை அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.

பிள்ளைகளின் வளர்ச்சிக்காக உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு அவமானங்களைக் கண்டு துவளாமல், உழைத்த அந்தத் தந்தையின் பெருமையை நாடே போற்றுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.