May 4, 2017
நிர்பயா வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
டில்லியில், மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை(மே-5) வெளியாகிறது.கடந்த 2012ல், டில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவியை, ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பல், கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது; சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கி எடுத்த இச்சம்பவத்தில் பலியான அந்த மாணவி, 'நிர்பயா' என்ற புனைப் பெயரில் அப்போது ஊடகங்களால் அழைக்கப்பட்டார்.
மரண தண்டனை இந்த வழக்கில், பஸ் டிரைவர் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராம்சிங், திஹார் சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்; 18 வயது இளம் குற்றவாளி சிறுவன் என்பதால் விடுதலை செய்யப்பட்டான். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது; . தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (மே-5) பிற்பகல் 2 மணிக்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் வெளியாக உள்ளது.
நிர்பயா வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.