May 7, 2017
மூலநோயை குணப்படுத்தும் முள்ளங்கி
முள்ளங்கியை சாம்பாரில் பயன்படுத்துவதோடு பொரியல் செய்தும் உண்ணலாம். முற்றாத கிழங்குகள் உண்ணத்தகுந்தவை. முற்றியவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதுடன், சுவையும் குறைவாகவே இருக்கும்.சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலைத் தீர்க்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் கல் இவற்றிற்கு முள்ளங்கிச்சாற்றை தினமும் ஒரு வேளையாக பதினைந்து நாட்கள் குடித்து வர உபாதை நீங்கும்.ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாற்றை சமஅளவு தேனும், கல்உப்பு சிறிதளவும் கலந்து குடித்தால் வறட்டு இருமல், மார்ப்புச்சளி, கரகரப்பு குணமாகும்.
முள்ளங்கி இலைகளை மஞ்சள்காமாலைக்கும் பயன்படுத்தலாம். இலைகளை நசுக்கி சாறெடுத்து வடிகட்டி ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். தினமும் இவற்றை அரைக்கிலோ அளவு கொடுத்து வர வேண்டும். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.சிவப்புநிற முள்ளங்கியை விட வெள்ளைநிற முள்ளங்கி மருத்துவ குணத்தில் சிறந்தது.முள்ளங்கிக்கிழங்கு மூலநோய், விக்கல், வயிற்றுப்புண், காலரா நோய்களுக்கான சிகிச்சைக்கும் உதவும். முள்ளங்கிச்சாற்றுடன் கேரட் சாறும் சேர்த்துப் பருகினால் அது உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.
மூலநோயை குணப்படுத்தும் முள்ளங்கி
Reviewed by மறத்தமிழன்
on
May 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.