இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக கடந்த 26ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் நேற்று பிற்பகல் வளாகத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த மணீஷ் என்ற மாணவனே தாக்கியதாகவும், மணீஷ் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
கஸ்தூரியின் சர்ச்சை கருத்து
இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மாட்டுக்கறி விருந்து தவறு
அதாவது, மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தவறானது, அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
நீங்கள் ஹீரோ இல்லை
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன், ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை.
முத்த போராட்டத்திற்கும்..
முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வசைபாடும் இளைஞர்கள்
கஸ்தூரியின் இந்த டிவீட்டுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மாட்டிறைச்சிக்கு தடை, மாட்டிறைச்சி உண்பவர் மீது தாக்குதல் உள்ளிட்டவற்றால் கொதித்து போயுள்ள இளைஞர்கள் கஸ்தூரியை வசைபாடி வருகின்றனர்.
ரஜினி குறித்து பேசி..
ரஜினியின் ரசிகர்களுடனான பேச்சு குறித்து போர் அடிக்குது என போட்டு அண்மையில் அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார் கஸ்தூரி. இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்திலும் தலையிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்.






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.