May 11, 2017
அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...
இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!
உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.
"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"
நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...
என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...
என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...
கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.
அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...
டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.
அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...
இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்
Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,
"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...
அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?" என்றவர்
"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"
என கேட்க...
"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.
25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் '#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.
Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician*l
#CARE_CLINIC
For Appointments 044 65551839 24483314 (between 9 am and 1 pm)
At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …
அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!
அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...
Reviewed by Today India Admin
on
May 11, 2017
Rating: 5
Reviewed by Today India Admin
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.