Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2017

சுவாதி கொலை வழக்கு படம் வெளியாவதில் சிக்கல்….. போலீசாரின் அழுத்தம் சுவாதி அப்பா எதிர்ப்பு ?


 சென்னையிலுள்ள ஃஇன்போசிஸ் தகவல் தொழில் நிறுவன ஊழியரான சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி காலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜுலை 1ம் தேதி இரவு தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் செப்டம்பர் 17ம் தேதி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

சுவாதி கொலை, ராம்குமார் கைது, பிறகு ராம்குமார் தற்கொலை என்பது பொதுமக்களுக்கு புரியதாத புதிராக இருந்தது. இது தொடர்பான உண்மையை மக்களுக்கு விளக்க எஸ்.டி.எஸ் ரமேஷ் செல்வன் என்பவர் ’சுவாதி கொலை வழக்கு’ என்னும் தலைப்பில் படத்தை இயக்குகிறார்.

இதில் சுவாதி வேடத்தில் ஆயிரா, ராம்குமார் வேடத்தில் மனோ, நுங்கம்பாக்கம் ஆய்வாளர் வேடத்தில் அஜ்மல் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு படத்தின் டீசர் வெளியாகி 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  பார்த்தனர். இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலத்திற்கு வந்து சுவாதி இறந்த துயரத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை.

சுவாதி பெயரில் நேற்று வெளியான படத்தின் டீசரை பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த படம் வெளியானால் நான் மனரீதியாக பாதிக்கப்படுவேன். ஆகையால் படத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென புகார் அளித்தார். இதனால் சுவாதி கொலை வழக்கு படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.