கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.
அரசியலுக்கு வேண்டாம் திருச்சியை தொடர்ந்து சென்னை எழும்பூரிலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சி செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
முப்பாட்டன் செய்த தவறு தமிழ்நாட்டை நீண்ட நாட்கள் வாழ்ந்தால் யாரும் தமிழராக மாற முடியாது. என் தகப்பன், முப்பாட்டான் செய்த தவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த ரஜினி பச்சைத் தமிழனாக ஆக முடியாது.
ரஜினி புதுசா சொல்லல நாட்டின் முதல் குடிமகனை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை 21 வயதில் ஒருவர் நடத்திவிட முடியும். ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட 25 வயது வரை காத்திருக்க வேண்டும். இந்த அமைப்பே தப்பு என்கிறேன். இதைத்தான் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லிகிட்டு இருக்கிறார். இதை நாங்கள் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
சினிமாவோடு நிறுத்துங்க.. திரைத்துறை, கலைத் துறை என எதற்கு வேண்டுமானாலும் யாரும் வரலாம். ஆனால் அரசியலுக்கு வரக் கூடாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.
கேள்வி கேட்காதீங்க இதற்கு ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கும் வரலாம் தானே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வெகுண்டெடுழுந்த சீமான், ஜனநாயகம்,. ஜனநாயக நாடு என்றெல்லாம் என்கிட்ட கேள்வி கேட்காதீர்கள். யாருகிட்ட என்ன கேள்வி கேட்கின்றீர்கள் என்று சீறிப் பாய்ந்தார் சீமான்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.