May 2, 2017
சிதறு தேங்காயானது அதிமுக.. "தோப்பு" வெங்கடாசலம் தலைமையில் உதயமானது புது அணி...!
அதிமுகவில் புதிதாக தோப்பு வெங்கடாசலம் அணி உருவாகியுள்ளது.முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் தலைமையில்,கொங்கு மாவட்டங்களின் 13 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கடும் நெருக்கட
அதிமுகவில் மீண்டும் ஒரு அணி உருவாகியுள்ளது.முதல்வர் எடப்பாடி அணிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் 13 எம்எல்ஏக்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். மிக விரைவில் அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று சொல்கிறார்கள் கொங்கு மாவட்ட அதிமுகவினர்.
ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த குழுக்கள் அமைக்கப்பட்டதோடு சரி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இதோ நாங்க ரெடி என்று பேட்டி மட்டும் தினமும் தருகிறார்கள் என்று பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் ஈரோடு,நாமக்கல்,கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்.
ஆலோசனை
இந்த நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். அவருக்கு ஆதரவாக 13 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்
தோப்பு வெங்கடாச்சலம் கடந்த முறை 5 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் நிலையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்தவர்.செங்கோட்டையனுக்கு போட்டியாக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர் தோப்பு. இது இப்போது அணியாக பிரியும் அளவுக்கு சென்றுள்ளது.
எடப்பாடிக்கு கலக்கம்
ஒரு வேளை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 13 பேர் ஆதரவு தெரிவிக்காவிட்டால் எடப்பாடி மெஜாரிட்டியை நிச்சயம் இழந்து விடுவார். இதனால், ஓ.பி.எஸ். அணியின் ஆதரவை எடப்பாடி அணி கேட்கும் நிலை ஏற்படும். இது எடப்பாடி அணிக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலித் எம்எல்ஏக்கள்
ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட தலித் எம்.எல்.ஏக்ககள் தனி அணியா செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தியிருந்தனர்.
சிதறு தேங்காயானது அதிமுக.. "தோப்பு" வெங்கடாசலம் தலைமையில் உதயமானது புது அணி...!
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.