Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

சேகர்ரெட்டி டைரியை புரட்டினா ஜெயிலுக்கு போவது தி.மு.க.,வினர் தான்! தம்பிதுரை புதுகுண்டு!


கரூர் அண்ணா தொழில்சங்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், தமிழகத்தில் வருமானவரிதுறை சோதனை செய்வதின் பின்னணியில் அதிமுக ஆட்சியை கலைக்க பா.ஜ.,செய்து வரும் சதி என தி.மு.க.,செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.
சோதணையில் சிக்கிய சேகர்ரெட்டியின் டைரியை புரட்டினால் அதில் மாட்டுவது தி.மு.க.,வினர் தான். சி.பி.ஐ.,அறிக்கை வெளியே வரும் போது கம்பி எண்ணபோது யார் என ஸ்டாலினுக்கு தெரியும். அதில் தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் பலர் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியின் ஊழல் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தது தி.மு.க.,ஆட்சியின் தான்.
அ.தி.மு.க.,அணிகள் ஒன்று சேர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பேசி வருகின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் முடிவு எட்டும்.
கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என கையெழுத்து போட்டது பன்னீர்செல்வம். ஜெ.,மரணத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்கியது சசிகலா குடும்பம் தான். அப்போது வாய் திறக்காத பன்னீர் இப்போது சி.பி.ஐ.,விசாரணை கேட்பது வேடிக்கையாக உள்ளது.
தற்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு ஒதுங்கி விட்டனர். அவர்கள் ஆலோசனை கேட்டு நாங்கள் செயல்படுகிறோம் என்பதில் உண்மை இல்லை, என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.