May 28, 2017
இந்தியாவில் `ஜிகா வைரஸ்' இருக்கிறது - மத்திய அரசு ஒப்புதல்
கொசுக்கடியால் தொற்றி வரும் கிருமியின் பெயர் 'ஜிகா' வைரஸ். உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி 1947-ம் ஆண்டு தெரியவந்தது. அதன் பின்னர், அந்த வைரஸ் 1952-ம் ஆண்டு உகாண்டாவிலும் தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் 'ஜிகா' வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி பரவியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது.
இந்நிலையில் இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சமீபத்தில், உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு அறிக்கை அளித்தது. இந்தியாவில் 'ஜிகா வைரஸ்' இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. ஜிகா வைரஸ் நோய்க்கு உலகிலேயே இந்தியாதான் முதன் முதலில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அசத்தியது.
ஐதராபாத் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு இப்போது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் இருக்கிறது.
இந்தியாவில் `ஜிகா வைரஸ்' இருக்கிறது - மத்திய அரசு ஒப்புதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.