May 6, 2017
தலித்துகளும் சங்கராச்சாரிகளாக வேண்டும்... முடியுமா!... முடியாத?.........பதில் சொல்லுங்கப்பா - லாலு பிரசாத்!
அனைத்துச் சாதியினரும் சங்கராச்சாரிகளாக, இந்து மத தலைமைப் பதவிகளுக்கு வரவேண்டும் என்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.
அனைத்து சாதியினரும், சங்கராச்சாரியார் போல, இந்து மதத்தின் தலைமைப் பீட பதவிகளுக்கு வர வேண்டும் என்று, லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் பகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கு தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ''பாஜக.,வினர் தேசபக்தி என்ற பெயரில் மிகத் தவறான அரசியல் செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்க யாரும் இல்லை என்ற கற்பனையில், ஆதிக்க மனப்பான்மையோடு, பாஜக தலைவர்கள் நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், திட்டங்களையும் வெளியிடுகின்றனர். இதனை நான் எதிர்க்க திடமாக முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.
மேலும்,''பாஜக.,வுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளேன். 2019 லோக்சபா தேர்தலில், பாஜக தோல்வியை சந்திப்பது உறுதி. அதற்கான ஏற்பாடுகளில், நான் தீவிரமாக ஈடுபடுவேன். எப்போதும் இந்துத்துவா பற்றியும், அதன் அடிப்படைகளை பாதுகாப்பது பற்றியும் பாஜக கவலைப்படுகிறது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்
.
இந்து மதத்தில், ஆதிக்க சாதியினர்( மட்டுமே சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர் பதவிகளை வகித்து வருகின்றனர். இதனை எதிர்த்து, தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களும் சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்து மதத் தலைமை பதவிகளுக்கு வர நாம் பாடுபட வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. அத்துடன், இந்திய எல்லையில் பெரும் பதற்றம் நிலவும் சூழலில், பாஜக அரசு அதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுவரையிலும் முழு நேர பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பது மிக, கவலை தருகிறது,'' என லாலு பிரசாத் குறிப்பிட்டார்.
தலித்துகளும் சங்கராச்சாரிகளாக வேண்டும்... முடியுமா!... முடியாத?.........பதில் சொல்லுங்கப்பா - லாலு பிரசாத்!
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.