Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

‘ரஜினியை நம்பி நாங்கள் இல்லை’’ - தமிழிசை!


கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், அரசியல் ஆதாயத்திற்காக சிலர் அணுகும் போது ஆதரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், ரஜினி வாய்ஸ் கொடுத்து தான் நாங்கள் அரசியல் நடத்த வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ரஜினிக்கு பாஜக மரியாதை அளிக்கிறது. அதே நேரம் அரசியலில் தனிநபரால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு ஒரு கட்டமைப்பு வேண்டும்.

நாங்கள் எங்கள் அமைப்பை பலப்படுத்தி அதன் மூலமே தமிழகத்தில் பலம் பெற நினைக்கிறோம். யாருடைய தயவும் தேவையில்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.