May 9, 2017
கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: ஆசிரியை கொலை: கள்ளக் காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பொள்ளாச்சி அடுத்த கிணத்துகடவு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் நிவேதா (47). இவரது கணவர் ரகு. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிவேதா, விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருபவர் இளையராஜா (28). இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், நிவேதாவுக்கும் இளையராஜாவுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பழக்கம், பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கு முன்பு நிவேதாவின் மகளுக்கு சென்னை அருகே மறைமலைநகரில் வேலை கிடைத்ததால் அவர்மறைமலைநகருக்கு சென்றுவிட்டார்.
இதனால் நிவேதா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, பேஃஸ்புக் மூலம் சென்னை கொளத்தூர் வஜ்ரவேல் நகரை சேர்ந்த இன்ஜினியர் கணபதி (33) என்பவர் நிவேதாவுக்கு அறிமுகமானார். திருமணமான கணபதி, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வங்கியில் லோன் பெற்று தருவதாக நிவேதாவிடம் சொல்லியுள்ளார். இதனால் இருவரின் நட்பு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நிவேதாவும், இளையராஜாவும் ேகாவையில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். வழியில் மறைமலைநகரில் மகளை பார்த்துவிட்டு, அண்ணாநகருக்கு புறப்பட்டனர். நியூ ஆவடி சாலை வேலங்காடு சுடுகாடு அருகே வந்தபோது, ‘கணபதியிடம் எனது புகைப்படம் உள்ளது. அதை வாங்க வேண்டும், அதனால் அவரை இங்கு வர சொல்லி இருக்கிறேன்’ என்று இளையராஜாவிடம் நிவேதா கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து கணபதிக்கு நிவேதா போனில் பேசி, கணபதியை வரவழைத்துள்ளார். கணபதியும், நிவேதாவும் சற்று தொலைவில் நின்று பேசி கொண்டிருந்தனர். இதை காரில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த இளையராஜா ஆத்திரம் அடைந்துள்ளார். திடீரென நிவேதாவுக்கும், கணபதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சமாதானமாக சென்றுவிட்டனர். இதை பார்த்த இளையராஜாவுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டதால் காரை வேகமாக ஓட்டி இருவர் மீதும் மோதியுள்ளார். இதில் நிவேதாவின் கால் முறிந்தது. கணபதி தப்பினார். பின்னர் தெரியாமல் நடந்துவிட்டது போன்று நடித்து நிவேதாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அவர்களுடன் கணபதியும் சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில் நிவேதா இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் விரைந்தனர். அவர்கள் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உதவி கமிஷனர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இளையராஜா, கணபதி ஆகிேயாரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். ‘’நிவேதாவை காரை ஏற்றி கொன்றதை இளையராஜா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இளையராஜா மீது போலீசார், கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். போலீசாரிடம் இளையராஜா கூறுகையில், ‘நிவேதாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தேன். அவருடன் நட்பாக பழகினேன். கணபதியுடன் பழகியது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னிடம் பழகிவிட்டு அவனுடனும் பழகியுள்ளதால் நிவேதாவை காரை ஏற்றி கொலை செய்தேன்’ என்றார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: ஆசிரியை கொலை: கள்ளக் காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.