நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது.
விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது மத்திய அரசு.
இருவர் முறையில் மாடுகளை விற்பவர்களுக்கும், வாங்கும் விவசாயிகளுக்கும்கூட அடையாளம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் ட்விட்டர் பக்கத்தில்,’ இது இறைச்சி ஏற்றுமதியாளர்களுக்காக போடப்பட்ட சட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.
ஏழைகளையும், விவசாயிகளையும் தலித் இன மக்களையும் தாக்கும் ஓர் அறிவிப்பு’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் கேரள விவசாயத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் கூறுகையில், ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல சிறு அமைப்புகளின் கொள்கைகளை திணிக்க மத்திய அரசை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த அறிவிப்பை கடைப்பிடிக்கவும் மாட்டோம்’ எனக் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.