Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும்: பொன்.ராதாகிருஷ்ணன்


பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஏன் சந்தித்தார் என்று எனக்கு தெரியாது என்று மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை-கன்னியாகுமரி, மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் வரை ரூ3400 கோடியில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். ஆழ்கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.