Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2017

மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து.. ஈரோடு விவசாயிகள் நூதன போராட்டம்!


ஈரோடு சென்னிமலையில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எருதுகள், பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடக் கூடாது என்றும் இறைச்சிக்காக அவற்றை விற்கக் கூடாது என்றும் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் திமுக தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பால் கறக்காத மாடுகளை வைத்துக் கொண்டு தங்களால் தீனி போட முடியாது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மாடுகளை விற்றால்தான் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியும்
.
இதை திரும்ப பெறுமாறு கோரி வரும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மௌனம் காத்து வருவதால் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கு்ம போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தங்கள் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.