Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2017

அமெரிக்க அதிபராக பதவியேற்று முதல் முறையாக டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியா சென்றுள்ளார்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார். அவரை சவூதி அரேபியா மன்னர்  வரவேற்றார்.

முன்னதாக இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள், வத்திக்கான், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று சவூதி அரேபியா சென்றுள்ளார்.

இன்றும் நாளையும் அரபு மன்னர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிரம்ப்பின் சவூதி அரேபிய பயணம் அமெரிக்காவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வளர்க்கும் என கூறப்படுறது.

அமெரிக்க அதிபராக பதவியேற்று முதல் முறையாக டொனால்ட் டிரம்ப் வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.