Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2017

"ரெஸ்ட்" எடுத்துக் கொண்டிருந்த பெண் போலீஸை செல்போனில் படம் பிடித்த ஏட்டய்யா சஸ்பெண்ட்!


நெல்லை: ஓய்வறையில் படுத்திருந்த பெண் போலீஸ்காரரை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இரவுப்பணி மேற்கொண்டார்.

அப்போது பெண் போலீஸ் ஒருவர் ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்ததை தவறான நோக்கத்தில் செல்வகுமார் தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரிந்த அந்த பெண் போலீஸ், விருதுநகர் மாவட்ட போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து செல்வகுமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இதில் அவர் தவறு செய்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. போலீஸ் விசாரணை அறிக்கை டிஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையின் பேரில் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்த்குமார் சோமானி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.