May 8, 2017
புதுவையில் பதற்றம் பாஜ பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
புதுச்சேரி: புதுவையில் கொலை கொள்ளை ஆள் கடத்தல் மோசடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ள பாஜ பிரமுகரை மர்மக்கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.
புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு எல்ஐஜி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(எ) ஜெகநாதன் (35). வில்லியனூர் பகுதி பாஜ இளைஞரணி மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வழுதாவூர் சாலை குருமாம்பேட் மெயின்ரோட்டில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். எம்ஐஜி 3வது குறுக்கு தெருவில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பைக்கை அங்கேயே போட்டு விட்டு அருகில் உள்ள காலி மனைக்கு ஓடினார். அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று காலிமனை அருகில் உள்ள வீட்டின் பின்புறம் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜெகனின் சடலத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான ஜெகநாதன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தனது கூட்டாளி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைகளால் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
புதுவையில் பதற்றம் பாஜ பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.