Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2017

அரசியலை விட்டு விலக வைகோ முடிவு : முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை!


பரபரப்பாக அரசியல் வானில் சிறகடித்து பறந்த வைகோ, அரசியலில் இருந்து விலகி, பெரியார் வழியில் மதிமுகவை ஒரு சமூக இயக்கமாக மாற்ற போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, சில நாட்களுக்கு முன்னர், சிறையில் தம்மை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனுடன் மனம் விட்டு பேசிய அவர், மதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2009 ம் ஆண்டு, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் வைகோ. அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, போலீசார் அவர் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்தனர்.
அண்மைக்காலம் வரை, கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம், வைகோவே, நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி, ஒன்று இந்த வழக்கை விரைந்து முடியுங்கள், அல்லது என்னை சிறையில் அடையுங்கள் என்று நீதிபதியிடம் கூறினார்.
அதையடுத்து, வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம், மதிமுகவினர் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, அவ்வாறு போராட்டம் நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரே எச்சரித்து விட்டு சென்றார்.
அதன் பிறகும், அவர் ஜாமினில் வெளிவர விரும்பாததால், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் ஆகியோர், சிறையில் சென்று சந்தித்து, சிறையில் இருந்து வெளியில் வரும்படி வலியுறுத்தினார்.
ஆனாலும் அவர் வெளியில் வருவதாக இல்லை. அதனால், அவருடைய காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் தம்மை சந்தித்த முத்தரசன், திருமாவளவன் ஆகியோரிடம், அரசியலுக்கு முழுக்கு போடுவது குறித்து மனம் விட்டு பேசியுள்ளார்.
திமுகவை விட்டு பிரிவதற்கு முன்பாக 1992 ம் ஆண்டு, விடுதலை புலிகளோடு சேர்ந்து, கலைஞரை கொல்வதற்கு முயற்சி செய்ததாக, தம்மீது பழி சுமத்திய பொது கூட, மக்கள் நம்பவில்லை.
ஆனால், மக்கள் நல கூட்டணியை உருவாக்கிய போது, அதிமுகவிடம் 1000 கோடி ரூபாய்க்குமேல் வாங்கியதாக, சிலர் பேசி கொண்டு இருப்பது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக, அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதனால், வெளியில் வருவதற்கு தமக்கு விருப்பம் இல்லை. கொஞ்ச நாட்கள் உள்ளேயே இருக்க விரும்புகிறேன் என்று வைகோ, மன வேதனையுடன் சொன்னதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக, அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு, பெரியார் போல, சமூக இயக்கமாக மதிமுகவை நடத்துவதற்கும், அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும், வைகோவின் கருத்தை உறுதி படுத்துவது போலவே கூறுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதே சமயம், அவர் அப்படி ஒரு முடிவெடுக்க கூடாது என்று, அனைத்து கட்சியிலும் உள்ள நண்பர்கள் அவரை வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.