May 3, 2017
மன் கி பாத் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு கன் கி பாத்தை தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு - உத்தவ் தாக்ரே
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காததே எல்லையில் அத்துமீறல் அரங்கேறுவதற்கு காரணம் என்பது காங்கிரசின் குற்றச்சாட்டு. பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவும் பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு எதிராக துப்பாக்கியின் குரல் எனும் கன் கி பாத்தை தொடங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தால் உடல் சிதைக்கப்பட்ட வீரர்களின் ஒருவரான பிரேம் சாகரின் மகனும் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவரை கொன்ற பாகிஸ்தான் படையினர் உடல்களையும் மிருகத்தனமாக சிதைத்தது இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த நாட்டுக்கு எதிராக பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் அட்டூழியங்களை நிரந்தரமாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு கன் கி பாத்தை தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு - உத்தவ் தாக்ரே
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.