Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

அரசுக்கு எதிராக மோடி அண்ணன் போர்க்கொடி


குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகளில், சமையல் காஸ் விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால், மே 28 ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநில நியாய விலை கடைகள் மற்றும் கெரசின் லைசென்ஸ்தாரர் சங்க தலைவராக பிரகலாத் மோடி உள்ளார். அவர் கூறியதாவது:கெரசின் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கெரசின் ஒதுக்கீட்டை மத்திய அரசும் குறைத்து விட்டது. அத்துடன் உஜாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் சப்ளை செய்யும் பணியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மிகுந்த நிதி சிக்கலை ஏற்படுத்தி உள்ளளது. இப்பிரச்னையை தீர்க்க, சமையல் காஸ் வினியோகம் செய்ய எங்கள் சங்க உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில், மே 28 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார். ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகளில், சமையல் காஸ் விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால், மே 28 ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநில நியாய விலை கடைகள் மற்றும் கெரசின் லைசென்ஸ்தாரர் சங்க தலைவராக பிரகலாத் மோடி உள்ளார். அவர் கூறியதாவது:கெரசின் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏற்றவாறு கெரசின் ஒதுக்கீட்டை மத்திய அரசும் குறைத்து விட்டது. அத்துடன் உஜாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் சப்ளை செய்யும் பணியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மிகுந்த நிதி சிக்கலை ஏற்படுத்தி உள்ளளது. இப்பிரச்னையை தீர்க்க, சமையல் காஸ் வினியோகம் செய்ய எங்கள் சங்க உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும்.

இல்லாவிடில், மே 28 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.