May 21, 2017
இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ!
கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இந்த பில்பிமி பழத்தில் விட்டமின் C, B, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது.
பில்பிமி பழத்தின் மருத்துவ நன்மைகள் என்ன?
•சிறிதளவு பெருஞ்சீரகம், சிறிதளவு பில்பிமி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வேகவைத்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பாதி அளவும், மாலையிலும் குடித்தால், இருமல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
•6 பில்பிமி பழங்களை தட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் இரண்டு முறை குடித்தால், நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
•பில்பிமி பழங்களில் அமில பொருட்கள் அதிகமாக உள்ளதால், இது முகப்பரு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இந்த பழத்தை பாதிக்கப்பட்ட தோல் மீது வைத்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
•பில்பிமி பழத்தில் உள்ள அமில தன்மை புண்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. எனவே சிறிதளவு நொறுக்கப்பட்ட பில்பிமி பழத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும்.
•வாத நோயினால் ஏற்படும் வலிக்கு, சிறிதளவு பில்பிமி பழத்தின் இழைகளை மிருதுவாக அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் 2-3 முறை தடவ வேண்டும்.
•பில்பிமி பழத்தை அரைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால், உடனடியாக குணமாகும். மேலும் இது வாய் புண்களையும் குணப்படுத்தும்.
இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.