May 11, 2017
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மூலம் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்
கோர்ட்டை அவமதிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் கோல்கட்டா நீதிபதி கர்ணன், வக்கீல் நெடுமாறப்பா மூலம் மன்னிப்பு கேட்டார் . இதனால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட தண்டனை யில் இருந்து தப்பிக்க முடியும் என கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்த சில காலங்களில் நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு சர்ச்சையான விமர்சனத்தை கூறி வந்தார். இந்நிலையில் மன நல பரிசோதனைக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் அவருக்கு 6 மாத சிறத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். போலீசாரும் இவரை கைது செய்ய தமிழகம், ஆந்திரா, கர்நாடகா சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இதனையடுத்து அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் நெடுமாறப்பா கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார். இதனை நீதிபதிகள் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மூலம் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.