May 20, 2017
எதிர்காலத்தில் ஒப்புகைச் சீட்டுடன் மட்டுமே தேர்தல்.!
எதிர்காலத்தில் ஒப்புகைச் சீட்டுடன் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகாருக்கு ஆதாரங்கள் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நடைமுறையில் வெளிப்படை தன்மையை அதிகரிப்பது அவசியம் என்று கூறிய நசீம் ஜைதி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் வாங்க உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இனி நாட்டில் அனைத்து தேர்தல்களும் ஒப்புகைச் சீட்டுடன் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, ஜூன் 3-ம் தேதி செயல் விளக்கம் நடைபெறும் என்றும், இதில், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஒப்புகைச் சீட்டுடன் மட்டுமே தேர்தல்.!
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.