Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

செத்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தவும் தடையா..? இத்தனை வருஷம் தடை இல்லாமல் இப்ப என்ன தடை..?


சென்னை காவல் துறை சற்று முன்னர் வெளியிட்ட அவசர அறிக்கை,
மெரினா கடற்கரையில் சென்னை மாநகர சட்ட விதியை மீறி கூடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை பெருநகரில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41ன் படி காவல் துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஏற்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கூட்டங்கள்/போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
2003 ஆண்டு முதல் கடற்கரைகளின் அழகினை பாதுகாக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது அனைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
சென்னை பெருநகரில் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41 அமலில் உள்ள நிலையில், ஏற்பளிக்கப்படாத இடமான மெரினா கடற்கரையில் விதிமுறையை மீறி குழுமவோ
அல்லது கூட்டங்கள் நடத்தவோ முற்படுவது சட்டவிரோதமாகும்.
அத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.