May 16, 2017
தனது வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவது அரசியல் பழிவாங்கும் செயல் ப.சிதம்பரம் குற்றசாட்டு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள் நுங்கம்பாக்கத்தில் உள்ளன. இந்த வீடுகளில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். டெல்லி நொய்டா உள்ளிட்ட 14 இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் அன்னிய முதலீடுகளை பெறுவதற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையை தவிர மும்பை, டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள குருகிராம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
இது குறித்து ப.சிதமபரம் கூறியதாவது:-
தனது வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவது அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல்.என் மகன் உள்பட என்னை சார்ந்தவர்களை குறிவைத்து மத்திய அரசு சிபிஐ போன்ற நிறுவனங்களை பயன்படுத்துகிறது. சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
நான் பேசுவதையும், எழுதுவதையும் இதுபோன்ற சோதனைகள் மூலம் தடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நான் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன் அதை யாராலும் தடுக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
தனது வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவது அரசியல் பழிவாங்கும் செயல் ப.சிதம்பரம் குற்றசாட்டு
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.