Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த‘சாதனை’பெண் குழந்தை


 ராமநாதபுரம் மாவட்டம், சிகில்ராஜ வீதியை சேர்ந்த இன்ஜினியர் தினேஷ்குமார் மகள் தமிழினி(3). இவர், ஒரு நிமிடத்தில் 69 சர்வதேச மற்றும் தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களின் பெயர்களை படத்தை பார்த்து சொல்லி சாதனை படைத்தார். நாமக்கல்லை சேர்ந்த 5 வயது சிறுவன் ரேவந்த், ஒரு நிமிடத்தில் 66 தலைவர்களின் பெயரை கூறி படைத்த சாதனையை தமிழினி முறியடித்தார். இந்திய சாதனை புத்தக நிறுவன பொறுப்பாளர் விவேக், தமிழினியை பாராட்டி சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.

இதுகுறித்து அவரின் தாய் ராஜராஜேஸ்வரி கூறியதாவது: தமிழினிக்கு ஒன்றே முக்கால் வயதில் 4 அல்லது 5 தலைவர்களின் படத்தை காட்டி, பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் பயிற்சி அளித்தேன். படிப்படியாக தலைவர்கள் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பெயர்களை தெரிந்து கொள்ள கற்றுக்கொடுத்தேன். இந்திய சாதனை புத்தகத்தில் தமிழினி இடம் பிடித்தது மகிழ்ச்சி, என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.