Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

இளையராஜா வீடு முன்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


இலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இசையமைப்பாளர் இளையராஜா செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி அவர் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அதன்படி இளையராஜா வீடு முன்பு நேற்று அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் வை.இளங்கோவன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘ரத்தக்கரை படிந்த சிங்கள இனவெறியர் களோடு இளையராஜா கைக்கோர்த்து நிற்கக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள். எனவே, ஜூலை மாதம் அவர் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை கைவிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கூறினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.