Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2017

பாஜகவுக்கு பெப்பே.. என் வழி தனி வழி... தனிக் கட்சியில் ரஜினி திட்டவட்டம்!


பாரதிய ஜனதா விடுத்த அழைப்பை நடிகர் ரஜினிகாந்த் நிராகரித்துள்ளார். தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ள ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை: பாரதிய ஜனதா கட்சி விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருப்பதுடன் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார் ரஜினிகாந்த்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் உருவாகியுள்ளது. வலிமையான அரசியல் தலைவர் யாரும் இல்லாத சூழல் தமிழகத்தில் பல குழப்பங்களுக்கு வித்திட்டு வருகிறது.

 பாஜக படுமும்முரம்
இதை பாரதிய ஜனதா கட்சி தமக்கு சாதகமாக்கிக் கொள்ள படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்தை வளைத்துப் போட பெரும் போராட்டமே நடத்தி வருகிறது பாஜக.

தனிக்கட்சியில் உறுதி
பாஜகவில் ரஜினிகாந்த் இணைந்தால் அவரை முதல்வர் வேட்பாளராக்கவும் அக்கட்சி முன்வந்தது. ஆனால் ரஜினிகாந்தோ தனிக்கட்சி தொடங்குவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.

  இடைவிடாது ஆலோசனை
தனிக்கட்சி தொடங்கும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், எப்படி அவற்றை கையாள்வது என்பது குறித்து முக்கிய பிரமுகர்களிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரிடமும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.


உற்சாகத்தில் ரஜினிகாந்த்
இந்த சந்திப்புகளின் போது, இப்போதாவது நீங்கள் அரசியலில் இறங்க முடிவெடுத்தது நல்லது... இந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாதீர்கள் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது ரஜினிகாந்தை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளதாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.