May 10, 2017
கற்பழிப்புகளை தடுக்க வீடுதோறும் போலீசை நிறுத்த முடியாது: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
கற்பழிப்பு சம்பவங்களை தடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு ஜே.கே.லான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காளிசரண் சரப் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ராஜஸ்தானில் சமீபகாலமாக பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் காளிசரண், “பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் போலீசை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டுமா? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் நடந்ததே இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தை காங்கிரஸ் அரசியலாக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி குறை சொல்வதை விட்டுவிட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதற்கான யோசனைகளை கூறி அரசுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட்டிடம் கேட்டபோது, ‘அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியதன் மூலம், மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறார். மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு பெண் இருக்கும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரது கருத்து குற்றவாளிகளை ஊக்குவிப்பதுபோல் உள்ளது.’ என்றார்.
கற்பழிப்புகளை தடுக்க வீடுதோறும் போலீசை நிறுத்த முடியாது: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.