Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

தமிழக மக்கள் திருந்த பல நூறாண்டுகள் ஆகும்.. தெய்வமகள் காயத்ரிக்கு ரசிகர் மன்றமாம்!


தெய்வமகள் சீரியல் வில்லி காயத்ரிக்கு இப்போது ரசிகர் மன்றம் ஆரம்பித்து பிளெக்ஸ் பேனரெல்லாம் வைத்து வருகின்றனர்.

தெய்வமகள் சீரியல் இப்போது டாப் கியரில் எகிறிக்கொண்டிருக்கிறது. வில்லத்தனம் செய்யும் அண்ணியார்தான் இப்போது இளசுகளின் தலைவியாகி வருகிறார். காயத்ரிக்கு ரசிகர்மன்றமெல்லாம் ஆரம்பித்து பிளக்ஸ் பேனர் வைத்து அலப்பறையை கொடுத்து வருகின்றனர்.
தெய்வமகள் சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜெய்ஹிந்த் விலாஸ் மூத்த மருமகள் காயத்ரி செய்யும் வில்லத்தனங்கள் ரத்தத்தை உறைய வைப்பவை. இப்படி எல்லாம் கூட நடக்குமா? எப்படி ரூம் போட்டு யோசிக்கிறாங்க என்று கரித்து கொட்டுகிறார்கள் இல்லத்தரசிகள்.

கணவர், குழந்தை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீடு ஆகியவற்றை அடைய மாமனார், மாமியார், கொழுந்தன்கள், ஓரகத்தி என அனைவரையும் அலறவைக்கும் காயத்ரியை சபிக்காத இல்லத்தரசிகளை இருக்க மாட்டார்கள். ஆனால் அவரது வில்லத்தனத்தை ரசிக்கும் இளசுகளோ இப்போது ரசிகர்கள் மன்றமே ஆரம்பித்து விட்டனர்.

சமுக வலைத்தளங்களில் காயத்ரிக்கு ரசிகர்கள் குழு இருக்கின்றன. அவரது புகைப்படங்களை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர் அண்ணியாரின் விழுதுகள்.

அதெற்கெல்லாம் ஒருபடி மேலாக இப்போது கிராமத்து திருவிழாக்களில் வரவேற்பு பேனரில் அண்ணியாரின் விழுதுகள் என்று போட்டு காயத்ரி ரசிகர் மன்றம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகர்களுக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள் இப்போது சீரியல் வில்லிக்கும் மன்றம் ஆரம்பித்து விட்டனர். இவங்க எல்லாம் எங்க இருந்துதான் கிளம்புறாங்களோ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.