May 1, 2017
பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தங்கை கைது
பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தங்கை, மருத்துவக்கல்லூரி மாணவர், மாணவரின் தம்பி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தங்கை, மருத்துவக்கல்லூரி மாணவர், மாணவரின் தம்பி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்துத் தகராறில் தங்கை கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்துள்ளது.
பா.ஜனதா பிரமுகர் சாவு
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 27). பா.ஜனதா பிரமுகர். இவரது தந்தை முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர். இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23–ந்தேதி அதிகாலை கார்த்திக் ராஜ் கோனஜே பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார்.
அதன் பின்னர் அவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு தேரளகட்டேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார். இதுதொடர்பாக கோனஜே போலீசார் முதலில் விபத்தில் சிக்கி கார்த்திக்ராஜ் இறந்துபோனதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் கார்த்திக் ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், கொலையாளிகளை உடனே கைது செய்ய கோரியும் பா.ஜனதாவினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். அதைதொடர்ந்து கோனஜே போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
மேலும் விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது, கார்த்திக் ராஜை சொத்துத் தகராறில் அவரது தங்கை காவ்யா (25) என்பவர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து காவ்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக காவ்யா, தனது அண்ணன் கார்த்திக் ராஜை கொலை செய்ய தனது நண்பர்களான கவுதம் (26), இவரது தம்பி கவுரவ் (18) ஆகியோருக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அதைதொடர்ந்து 2 பேரும் சேர்ந்து, சம்பவத்தன்று நடைபயிற்சிக்கு சென்ற கார்த்திக் ராஜை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதைதொடர்ந்து காவ்யா, கவுதம், கவுரவ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் கவுதம் மருத்துவக் கல்லூரி மாணவர் ஆவார். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
கொலையை மறைக்க முயன்ற போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
கொலையான பா.ஜனதா பிரமுகர் கார்த்திக் ராஜ் விபத்தில் சிக்கி பலியானதாக முதலில் கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையை மறைக்க காவ்யா, கோனஜே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸ்காரரின் உதவியை நாடியுள்ளார். அதன்படி முதலில் கார்த்திக் ராஜ் விபத்தில் சிக்கி இறந்துபோனதாக வழக்குப்பதிவு செய்தது, கைதான காவ்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து கொலையை மறைக்க முயன்றதாக போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சந்திரசேகர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரின் பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தங்கை கைது
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.