May 15, 2017
ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
அரியானாவில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஈவ்-டீசிங் தொல்லைக்கு ஆளாவதால் 80 மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
சண்டிகார், கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று கான்வாலியில் நாங்கள் படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது ஈவ்-டீசிங் தொல்லைக்கு ஆளாக வேண்டியது உள்ளது, பயம் அதிகமாக உள்ளது என கூறிஉள்ளனர்.
இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதனை அவர் அதிகாரிகளிடம் எடுத்து சென்று உள்ளார், ஆனால் எந்தஒரு சாதகமாண பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் சவுகான் பேசுகையில், “ மாணவிகள் பள்ளி செல்லும் வேலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் தலை கவசம் அணிந்து செல்லும் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால் மாணவிகள் அச்சம் கொண்டு உள்ளனர்,” என கூறிஉள்ளார்.
பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளது, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த எங்களுக்கும் விதிமுறைகள் உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறிஉள்ளார். போலீஸ் அதிகாரி சங்கீதா காலியா பேசுகையில், “இது தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. அவர்களிடன் நான் பேச முயற்சி செய்கிறேன், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்றார். இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு கிராம மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.