May 9, 2017
நாகர்கோவில் அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக சிறுவன் வாக்குமூலம்:
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் லெட்சுமிபுரத்தை சேர்ந்த மாடசாமி மனைவி வீரலெட்சுமி(63). கடந்த 25ம்தேதி அப்பகுதியிலுள்ள ெஜபக்கூடத்துக்கு சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், வீரலெட்சுமியை நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் அடுத்த அடங்கார்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்து சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் பற்றி போலீசார் விசாரித்ததில் மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல், வீரலெட்சுமியை ஆரல்வாய்மொழி அருகே உள்ள கண்ணுபொத்தை மலைப்பகுதிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 6ம்தேதி, கண்ணுபொத்தை மலைப்பகுதியில் அழுகிய நிலையல் நிர்வாண நிலையில் கிடந்த வீரலெட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
இதில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் ஆவரைக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வீரலெட்சுமி மட்டுமின்றி இதற்கு முன் 6 பெண்களை இதே பாணியில் இந்த காட்டு பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்களை சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து தனிப்படை போலீசார் மலை பகுதியில் முகாமிட்டு உடல்களை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் 2 வது நாளாக கண்ணுபொத்தை மற்றும் அதை சுற்றியுள்ள மலை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் இளம்பெண்களின் உள்ளாடைகளும், சில எலும்பு துண்டுகளும் சிக்கின. தடயவியல் சோதனைக்கு பிறகே இது மனித எலும்புதானா என்பது தெரியவரும். கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் வன விலங்குகளுக்கு இரையாகி இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது என்று போலீசார் கூறினர்.
குமரி - நெல்லை எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் இளம்பெண்கள் யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது குறித்தும் கைப்பற்றப்பட்ட பெண்களின் ஆடைகளை காட்டியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 வயது சிறுவனை, நாங்குநேரி சிறார் காப்பகத்தில் போலீசார் அடைத்துள்ளனர். சிறுவனிடம் பெற்ற வாக்குமூலமும், தற்போது போலீஸ் பிடியில் உள்ள சிலர் கூறும் வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. வீரலெட்சுமியை யார் அழைத்து சென்றார்கள்? என்பதில் கூட குழப்பங்கள் உள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த, 17 வயது சிறுவனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் மேலும் 3 பேர் போலீஸ் பிடியில் இருப்பதாகவும், இன்னும் 3 பேர் பிடிபட வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாகர்கோவில் அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக சிறுவன் வாக்குமூலம்:
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.